வேட்டவலம் சம்பந்த விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
Update: 2023-12-01 08:33 GMT
சம்பந்த விநாயகர்
வேட்டவலம் சம்பந்த விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் பழமை வாய்ந்த சம்பந்த விநாயகர் கோயிலில் கார்த்திகை மாத தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி விழா நேற்று மாலை நடந்தது.இதையொட்டி சம்பந்த விநாயகருக்கு பால், தேன், பன்னீர், இளநீர், சந்தனம் பஞ்சாமிர்தம், உள்ளிட்டபல்வேறு பூஜைப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து சம்பந்த விநாயகர் பித்தளையில் தங்க முலாம் பூசப்பட்ட கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.