ராசிபுரம் அருள்மிகு ஸ்ரீ இரட்டை விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை !

ராசிபுரம் அருள்மிகு ஸ்ரீ இரட்டை விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது.;

Update: 2024-02-29 04:53 GMT

விநாயகர் சங்கடஹர சதுர்த்தி பூஜை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கடைவீதி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ இரட்டை விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி மாசி மாதம் பூஜை அபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ இரட்டை விநாயகருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்களான பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்து மகா தீபாரதனையும் நடைபெற்றது. தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ இரட்டை விநாயகர் சங்கடஹர சதுர்த்தி சர்வ அபிஷேக அலங்காரம் சிறப்பாக செய்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News