மரக்கன்று நடும் விழா: கரூர் மாநகராட்சி மேயர் துவக்கி வைப்பு
கரூரில் உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் காவிரி கூக்குரல் திட்ட நிர்வாகிகள் இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும் விழாவை மாநகராட்சி மேயர் கவிதா துவக்கி வைத்தார்.
உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் காவிரி கூக்குரல் திட்ட நிர்வாகிகள் இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும் விழாவை கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் துவக்கி வைத்தார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, காவிரி கூக்குரல் திட்ட நிர்வாகிகள் மற்றும் கரூர் கொங்கு மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவை, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உலக சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கு மரங்கள் வளர்ப்பது அவசியம் என்பதை வலியுறுத்தி கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
மேலும், பள்ளி வளாகத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை இன்று நட்டு வைத்தனர். மேலும், பள்ளியில் பயிலும் சுமார் 1500 மாணாக்களுக்கு தலா ஒரு மரக்கன்று வீதம் இன்று வழங்கி அவரவர் வீட்டில் மரக்கன்றுகளை நடுவதற்கு அறிவுறுத்தினர்.
இதன் அடிப்படையில் இந்த பணிகளை கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கொங்கு மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் பாலகுருசாமி கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
காவிரி கூக்குரல் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசங்கர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும், கொங்கு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணாக்கர்கள் மரக்கன்று நடும் விழாவில் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.