தலைவலியால் பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு
எட்டயபுரம் அருகே பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ;
Update: 2024-01-31 04:44 GMT
தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மகள் முனீஸ்வரி (17). இவர் எட்டயபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவருக்கு அடிக்கடி தலைவலி வருமாம். மருந்து சாப்பிட்டும் குணமாகவில்லையாம்.
இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இந்த சம்பவம் குறித்து எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) வெங்கடேச பெருமாள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.