சகோதரர் வீட்டிற்குச் சென்ற அரசு பள்ளி ஆசிரியை மாயம்

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே சகோதரர் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற அரசு பள்ளி ஆசிரியை மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-02 17:14 GMT

ஆசிரியை மாயம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வட்டம் கோட்டவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் பியூட்டின் பிரிஷா . இவர் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.இவர் தனது தம்பி வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு வெளியே சென்றவர் பின்னர் இதுவரையிலும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக பெற்றோர், பியூட்டிலின் பிரிஷாவின் செல்போனுக்க தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. மேலும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.இதையடுத்து தாயார் சந்திரா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியைகாணாமல் போனது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான ஆசிரியை கடத்தப்பட்டாரா,இல்லை வேறு ஏதாவது காரணங்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News