பரீட்சை எழுதி முடித்த பள்ளி மாணவி திடீரென மாயம் - போலீசார் வழக்கு பதிவு
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கொப்பம்பட்டியில் நடப்பாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய பள்ளி மாணவி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திடீரென மாயமானார். காவல் நிலையத்தில் புகார்.போலீசார் வழக்கு பதிவு.
Update: 2024-03-25 06:23 GMT
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கொப்பம்பட்டியை சேர்ந்தவர் 17 வயதான பள்ளி மாணவி. இவர் நடப்பாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 23 ம் தேதி காலையில் யாரிடமும் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியே சென்று உள்ளார் பள்ளி மாணவி. பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் பள்ளி மாணவி கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சிடைந்த அவரது தாயார் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பள்ளி மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.