பள்ளி கல்லூரிகளில் திரைப்படங்கள் திரையிடல்: தமிழக அரசுக்கு உத்தரவு
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் கல்வி தொடர்பான திரைப்படங்கள் திரையிடுவது தொடர்பான கோரிக்கையை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-03 16:41 GMT
கோப்பு படம்
தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்லூரி கல்வி திரைப்பட அமைப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் கல்வி தொடர்பான திரைப்படங்கள் திரையிடுவது தொடர்பான கோரிக்கையை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2024 – 25 ஆம் கல்வியாண்டில் பள்ளி, கல்லூரிகளில் கல்வி தொடர்பான திரைப்படங்கள் திரையிடுவதற்கான அனுமதி வாங்குவது குறித்து பரிசீலிக்கபடும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.