SDPI கட்சியின் பெரம்பலூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு
பெரம்பலூர் மாவட்டத்திற்கு இரயில் வழித்தடம் அமைக்கப்பட வேண்டும் என்பது பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் பெரம்பலூருக்கு இரயில் வழித்தடம் அமைத்திட விரைவாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.;
SDPI கட்சியின் பெரம்பலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நிஸ்வான் மஹாலில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக SDPI கட்சியின் மாநில செயலாளர்கள் A.S. ஷபீக் அஹம்மது மற்றும் R. ஹசான் பைஜி அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்கள். இந்த மாவட்ட பொதுக்குழுவில் SDPI கட்சியின் அடுத்த மூன்று வருடங்களுக்கான புதிய மாவட்ட நிர்வாகிகள் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தி மாநில தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மாவட்ட தலைவர் : Dr. A. முஹம்மது ரபீக் மாவட்ட துணை தலைவர் : மு. முஹம்மது பாரூக் மாவட்ட பொது செயலாளர் : 1. சையது அபுதாஹிர் 2. அப்துல் கனி மாவட்ட செயலாளர் : 1.அபுபக்கர் சித்தீக் 2. அஸ்கர் அலி மாவட்ட பொருளாளர் : முகையதீன் பாரூக் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் : சாஜஹான் எஸ்டிபிஐ கட்சி பெரம்பலூர் மாவட்ட பொதுக்குழு தீர்மானங்கள் : 1. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கை. களத்தூர் காந்தி நகர் படுகொலை செய்யப்பட்ட தலித் சமூகத்தை சேர்ந்த மணிகண்டன் குடும்பத்தினருக்கு ரூ. 50 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். படுகொலைக்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. 2. பெரம்பலூர் மாவட்டத்திற்கு இரயில் வழித்தடம் அமைக்கப்பட வேண்டும் என்பது பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் பெரம்பலூருக்கு இரயில் வழித்தடம் அமைத்திட விரைவாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. 3. பெரம்பலூரில் எளம்பலூர் ரோவர் கல்லூரி நான்கு ரோட்டில் அடிக்கடி விபத்து நடக்கிறது. இந்த பகுதியில் மேம்பாலம் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. 4. பெரம்பலூரில் எங்கு பார்த்தாலும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பல புகார்கள் கொடுத்ததும் உரிய பயனில்லை. பெரம்பலூர் நகரில் கொள்ளை சம்பவத்தை கடும் நடவடிக்கை எடுத்து தடுத்திட வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. 5. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் விளையாட்டு திடல் அமைத்திட வேண்டும் என்று நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளையாட்டு திடலை அமைத்து தர வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.