எஸ்.டி.பி.ஐ கட்சியினர் பாபர் மசூதி இடிப்பு எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம்
Update: 2023-12-07 02:08 GMT
ஆர்ப்பாட்டம்
டிசம்பர் 6, பாபர் மசூதி இடிப்பு தினம், நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் , மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, வாடிக்கை. பாபர் மசூதி இடிக்கப்பட்டு, 31 ஆண்டுகள் ஆன நிலையில், யிலாடுதுறையில், நகராட்சி அலுவலகம் முன்பாக சோஷியலிஸ்ட் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியினர்,100க்கும் மேற்படோர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மாவட்டத் தலைவர் முகமது ரஃபி தலைமை வகித்தார், திராவிட விடுதலைக்கழக மாவட்ட செயலாளர் மகேஷ், தமிழர் உரிமை இயக்க அமைப்பாளர் சுப்புமகேஷ் உட்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.