பாலக்கோட்டில் எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-12-07 05:51 GMT

எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜீலான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க்கு முஸ்லிம் மெஹதவியார் ஜமாத் செயலாளர் அர்மான் நவாப் ஜான், திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இதாயத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டண உரையில் கிருஷ்ணகிரி எஸ்.டி.பி.ஐ கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஜாவித் , வேலூர் மண்டல செயலாளர் ஷேக் அலாவூதின், விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணை செயலாளர் ராசகோபால் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார். பாபர் மசூதியை இடித்து மாபெரும் அநீதியை ஏற்படுத்தி உள்ளது. பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும். மீண்டும் அதே இடத்தில் பாபர் மசூதியை ஒன்றிய அரசு கட்டித் தர வேண்டும். பாபர் மசூதி இடித்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 63 பேர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ, வி.சி.க, திமுக உள்ளிட்ட கட்சியை சேர்ந்த திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News