திருப்பூரில் வணிகப் பயன்பாட்டிற்கு அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்திற்கு சீல்

திருப்பூர் பாண்டியன் நகரில் வணிக பயன்பாட்டிற்கு அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2024-06-01 11:03 GMT

சீல் வைப்பு

 திருப்பூர் - பாண்டியன் நகரில், வேலுமணி என்பவர், குடியிருப்புக்கான கட்டடம் கட்ட மாநகராட்சியில் அனுமதி பெற்றார். அனுமதியின்படி கட்டடம் கட்டாமல், வணிக பயன்பாட்டிற்கான கட்டடம் கட்டியதாகவும், மாநகராட்சி விதிகளின் படி போதிய இடைவெளி விடாமல் கட்டியதாகவும், அப்பகுதியை சேர்ந்த குப்புராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை தொடர்ந்து, நீதிமன்றம் கடந்த வருடம் நவம்பர் மாதம் கட்டடத்திற்கு சீல் வைக்க திருப்பூர் மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் கட்ட்ட உரிமையாளருக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பினர். இருப்பினும், கட்டடத்தை கட்டட உரிமையாளர் வேலுமணி பனியன் நிறுவனத்திற்கு வாடகை விட்டிருந்தார்.

இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் வழங்கிய ஆறு மாதங்களுக்கு மேலாகி, காலக்கெடு நிறைவடைந்த காரணத்தினால், வேலுமணியின் கட்டடத்திற்கு இன்று வந்த மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் அங்கு செயல்பட்டு வந்த பனியன் நிறுவனத்தின் பொருட்களை அப்புறபடுத்தி விட்டு, ஐம்பது லட்சம் மதிப்பிலான கட்டடத்தை பூட்டி சீல் வைத்தனர்.

Tags:    

Similar News