பரமத்தி வேலூரில் செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்கள் பறிமுதல்
பரமத்தி வேலூரில் செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வேலுார் வாரச்சந்தையில் உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் வேலுார் டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் இன்று அங்கு விற்கப்படும் மாம்பழங்களை ஆய்வு செய்து கெட்டுப் போன மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். பரமத்தி வேலூரில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
இவ்வாறு பழுக்க வைக்கும் மாம்பழங்களை உண்பதன் மூலம் புற்றுநோய், இருதய பாதிப்பை ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் வேலுார் வார சந்தையில் உணவு பாதுகாப்புத்துறையினர், டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கண்காணித்து தடுக்க வேண்டும் என செய்தி நேற்று முன்தினம் நமது நாளிதழில் வெளியானது.
இதனை தொடர்ந்து நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி மற்றும் வேலுார் டவுன் பஞ்சாயத்து அதிகாரிகள் வார சந்தையில் ஆய்வு செய்தனர். அப்போது 100 கிலோ கெட்டுப்போன மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர். கார்பைடு கல் மூலம் மாம்பழங்களை பழுக்க வைக்க கூடாது எனவும் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும்.
மாம்பழ பழுக்க வைக்க உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டப்படி இயற்கையாக பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டும் இனிவரும் காலங்களில் இது போன்ற ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி தெரிவித்தார்.