முறையான ஆவணங்கள் இருந்தும் பணத்தை பறிமுதல் - வியாபாரிகள் தர்ணா
முறையான ஆவணங்கள் இருந்தும் பணத்தை பறிமுதல் செய்ததாக புகார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் தர்ணா.;
Update: 2024-03-21 10:20 GMT
போராட்டம்
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் வாரம்தோறும் வியாழக்கிழமை கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு ஈரோடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வியாபாரிகள் மாடு,எருமைகள் வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் வருவார்கள்.இந்நிலையில் அவ்வாறு வெளி மாவட்டங்களில் இருந்து மாடுகள் வாங்குவதற்காக வந்த வியாபாரிகளிடம் பறக்கும்படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். ஒரு வாகனத்தில் 5 பேர் இருந்தால் அவர்களிடம் பணத்தை தனித்தனியாக பெற்று ஒருவரிடமருந்து இருந்து பணத்தை பறிமுதல் செய்வதாகவும் , ஆவணங்களை காட்டியும் பணத்தை திருப்பி ஒப்படைக்காமல் ஆட்சியர் அலுவலகத்திற்கு வர சொல்லி அலைக்கழித்து வருவதாகவும் மேலும் தற்போது வீட்டிற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு பின்னர் பெற்றுக்கொள்ளவும் என அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சொந்த ஊருக்கு செல்ல வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப கூட பணம் இல்லாமல் தவித்து வருவதாக தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் பத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.