வாணியம்பாடி அருகே ஆவணமின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்
வாணியம்பாடி அருகே ஆவணமின்றி தனியார் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் நிரப்ப கொண்டு சென்ற 2,54,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி கூட்டு சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சோபனா தலைமையில் அதிகாரிகள் வாகன தணிகையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாலாஜி என்பவர் வாணியம்பாடி பாரத ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து 2 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டு திம்மம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஏ.டி.எம்(டாடா இண்டிகோ ஏ.டி.எம்மில்) நிரப்ப இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது தும்பேரி கூட்டு சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஷோபனா தலைமையில் அதிகாரிகள் வாகனத் தணிகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலாஜி வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அதில் அவர் வைத்திருந்த பையில் அவணமின்றி ரூபாய் 2 லட்சத்து 54 ஆயிரம் இருந்ததை கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஷோபனா வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அப்படைத்தார்.