தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கருத்தரங்கம்
பெண்கள் பதவி உயர்வை பறிக்கும் அரசாணை எண். 243ஐ உடனடியாக ரத்து செய்ய தமிழக அரசு முன்வரவேண்டும், பழைய பென்சன் திட்டம் தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று திண்டுக்கல்லில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக நடைபெற்றது.;
Update: 2024-03-11 07:09 GMT
மகளிர் தின கருத்தரங்கம்
திண்டுக்கல்லில் மகளிர் தின கருத்தரங்கம் எழுச்சியோடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இக்கருத்தரங்கில் பல்வேறு தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை நிகழ்த்துவோர் மீது உடனடியாக தண்டனை கிடைக்கவேண்டும். எந்த வகையில் அவர்கள் தப்பித்துவிடக்கூடாது. அதற்கு அரசு சட்ட ரீதியான துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசும் காவல்த்துறையும் பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பெண்கள் பதவி உயர்வை பறிக்கக்கூடிய அரசாணை எண் 243ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். டிட்டோ ஜாக் சார்பாக அரசு ஏற்றுக்கொண்ட 12 கோரிக்ககைளையும் உடனடியாக அரசு நிறைவேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது