தென்காசியில் அதிகாரிகளால் அவதி - கடை வியாபாரிகள் போராட்டம்
தென்காசியில் அதிகாரிகள் ஆய்வால் கடை வியாபாரிகள் போராட்டம்
Update: 2024-02-28 01:43 GMT
தென்காசி மாவட்டம் முதலியார்பட்டியில் உள்ள புரோட்டா கடையில் உணவு பாதுகாப்பு அலுவலர் நாக சுப்பிரமணியன் ஆய்வு திடீர் செய்தார். இவர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆய்வு என்கிற பெயரில் வியாபாரிகளுக்கு அதிக அளவில் அபராதம் விதித்ததாக தெரிகிறது. இதை கேள்விப்பட்டு அப்பகுதிக்கு வந்த தென்பொதிகை கடை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கட்டி அப்துல் காதர், செயலாளர் நவாஸ்கான், பொருளாளர் பாக்யராஜ், உள்ளிட்ட வியாபாரிகள் போராட்டம் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.