சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற பங்குனி பொங்கல் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Update: 2024-04-06 09:32 GMT
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் இந்து அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.பங்குனி பொங்கலின் 6 ஆம் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன.பின்னர் அம்மனுக்கு மஞ்சள் பட்டு உடுத்தி மேளம்,தாளம் முழங்க வாண வேடிக்கையுடன் "சிம்ம " வாகனத்தில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி அதிவிமர்ச்சியாக நடைப்பெற்றன. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சிறப்பாக செய்திருந்தனர்.