திருவிழாவில் பட்டாசு வெடித்து - ஆறு பேர் காயம்

மயிலம் அருகே திருவிழாவில் பட்டாசு வெடித்து ஆறு பேர் காயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-16 07:26 GMT

திருவிழாவில் பட்டாசு வெடித்து ஆறு பேர் காயம்

விழுப்புரம் மாவட்டம்,மயிலம் அடுத்த செண்டூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. நேற்று இரவு நடந்த விழாவையொட்டி, கோவில் வளாகத்தில் பட்டாசு வெடித்தனர்.அப்போது, அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மீது தீப்பொறி பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து.இதில், அங்கிருந்த சக்திவேல் மகன்கள் கவியழகன், 7; தமிழழகன், 5; சுப்ரமணியன் மகன் கவுஷிக், 7; காளி மகன் அன்பு, 10; சிவமூர்த்தி மகன் உதயா, 7; மற்றும் எடையப்பட்டு நாடக ஆசிரியர் சீனுவாசன், 47; ஆகியோர் படுகாயமடைந்தனர். உடன் அனைவரும் திண்டிவனம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். உதயா மட்டும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.விபத்து குறித்து மயிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News