திருச்செங்கோட்டில் சமூக ஊடகப் பயிற்சி முகாம்

நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு சார்பில் சங்கநாதன் என்னும் சமூக ஊடகப் பயிற்சி முகாம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது;

Update: 2024-01-29 12:27 GMT

பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் 

 பாரதியஜனதா கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் பயிற்சி நிகிழ்ச்சியான சங்க நாத நிகழ்ச்சி கொங்கு சமுதாய கூட்டத்தில் நடைபெற்றது.

இதில் மாநில IT Wing தலைவர் M.S பாலாஜி, IT Wing மாநில செயலாளர் நந்தகுமார், நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர், திருச்செங்கோடு நகர தலைவர் செங்கோட்டுவேல், மாவட்ட துணை தலைவர் ரமேஷ் கலந்து கொண்டனர். IT Wing கோட்ட இணை பொறுப்பாளர் சரவணன் அனைவருக்கும் சமூக ஊடக பயிற்சி அளித்தார்.

IT Wing மாவட்ட தலைவர் செந்தூரகண்ணன் வரவேற்றார்,இந்நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்ட சமூக ஆதரவாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் மாற்று கட்சியிலிருந்து வந்து சுமார் 100க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்.

கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட பாஜகதலைவர் ராஜேஷ் குமார் சமூக ஊடகப் பிரிவு மாநில தலைவர் எம் எஸ் பாலாஜி சேலம் கோட்ட பொறுப்பாளர் நந்தகுமார் மாநில செயலாளர் சரவணன் செந்தில் நகர பாஜக தலைவர் செங்கோட்டுவேல் மாவட்ட துணைச் செயலாளர் மற்றும் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ரமேஷ், சமூக ஊடகப்பிரிவு மாவட்ட துணை தலைவர்கள் அருண்குமார்,

நாகராஜ், ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசிய தமிழ்நாடு பாஜக சமூக ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் பாலாஜி கூறியதாவது, பத்தாண்டு கால மோடிஜி ஆட்சியின் பெருமைகளையும் நாட்டு மக்களுக்கு செய்துள்ள திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு சமூக ஊடகப் பிரிவை சேர்ந்ததுகட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பிரிவுகள் இருந்தாலும் முக்கியமான பிரிவாக கருதப்படுவது

சமூக ஊடகப்பிரிவு தான் ஒவ்வொருவரும் முகநூல் இன்ஸ்டாகிராம் எக்ஸ் தலம் என அனைத்தையும் பயன்படுத்துகிறோம் நமது திட்டங்கள் குறித்து தினமும் குறைந்தபட்சம் ஐந்து பதிவுகளை யாவது போட வேண்டும் பாஜகவின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்ததுசமூக ஊடகத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டது தான் நாமக்கல் மேற்கு மாவட்டத்தை பொருத்தவரை அனைத்திலும் சிறப்பாக இருந்தாலும் சமூக ஊடகப்பிரிவு சமூக ஊடகத்தில் நம்முடைய பங்களிப்பு குறைவாகத்தான் உள்ளது.

இதனை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் சமூக வலைதளங்களை கையாளுவது எப்படி என்பதை கட்சியினருக்கு எடுத்துக் கூறும் விதமாகவும் தான் இந்த முகாம் நடைபெறுகிறது இதனை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

பயிற்சி முகாமை தொடர்ந்து சூரியம்பாளையம் சட்டையம் புதூர் வெப்படை உள்ளிட்ட பகுதிகளை100 பெண்கள் உள்பட 150 க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர் கட்சியில் இணைந்த அனைவருக்கும் பாஜக நாமக்கல்மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் துண்டு அணிவித்து வரவேற்பு தெரிவித்தார்.

Tags:    

Similar News