சொலாரா தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கடலூரில் சொலாரா தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

Update: 2024-05-30 16:52 GMT

சொலாரா தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சொலாரா தொழிலாளர் விடுதலை முன்னணியின் நிர்வாகப் பணியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சங்கத்தின் சிறப்புத் தலைவரும் கடலூர் துணை மேயர் பா. தாமரைச்செல்வன் தலைமையில் கடலூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தொழிற்சங்க தலைவர் ஜெகன் செயலாளர் சுரேஷ்பாபு பொருளாளர் ராஜா இணைச் செயலாளர் ஜனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ஒவ்வொரு தொழிலாளியும் 200 ரூபாய் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது மேலும் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறும் தொழிலாளர்கள் ஊக்கத் தொகையாக 100 ரூபாய் மட்டும் அளிப்பது முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறும் தொழிலாளர்கள் 200 ரூபாய் ஊக்கத்தொகை அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. தொழிலாளர் விடுதலை முன்னணியின் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Tags:    

Similar News