லாரி மோதி ராணுவ வீரர் பலி
நல்லுார் டோல்பிளாசா பகுதியில் லாரி மோதி ராணுவ வீரர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-06-02 06:46 GMT
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சின்ன கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் மாசிலாமணி (39). இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் இவர் காஷ்மீர் மாநிலத்தில் பாராமுல்லா என்ற இடத்தில் பணிபுரிந்து விடுப்பில் வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 30ம் தேதி காலை கீரனுார் அருகே நல்லுார் டோல்பிளாசா பகுதியில் வந்தபோது எதிரில் வந்த அடையாளம் தெரியாத லாரி அதிவேகமாக மாசிலாமணியின் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இந்த விபத்து குறித்து மாத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.