வைகுண்ட ஏகாதசி - மதனகோபால சுவாமி திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
மதனகோபால சுவாமி திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்;
சொர்க்க வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி வைணவ தலங்களில் சொர்க்க வாசல் திறப்பு டிசம்பர் 23ஆம் தேதி இன்று நடைபெற்றது. அதன்படி பிரசித்திபெற்ற பெரம்பலூர் நகர் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அருள்மிகு மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. இத்தலம் பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்டது. பஞ்ச பாண்டவர்கள் பூஜித்து வழிபட்டு சென்றதால் இத்தலம் சகோதர்களிடையே ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கும் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது, மேலும் சகல நோய்களை தீர்க்கும் நந்தியாவட்டையை ஸ்தலவிருச்சமாக கொண்டது. இத்தகைய பெருமைக்குரிய ஸ்தலத்தில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 13ம் தேதி தேதி பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கிய விழாவையொட்டி, ஒவ்வொரு நாளும் அருள்மிகு மதனகோபால சுவாமி பக்தர்களுக்கு பல்வேறு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
அதனைத் தொடர்ந்து டிசம்பர்ம் 22ம் தேதி மோகினி அலங்காரமும் நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வான டிசம்பர் 23ஆம் தேதி இன்று காலை ஆறு மணி அளவில் அருள்மிகு மதனகோபால சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மலர் அலங்காரம் செய்யப்பட்டு தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பரமபத சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக மதனகோபால சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை திரளான பக்தர்கள் கண்டு கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கத்தோடு பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், ராமகிருஷ்ணா கல்வி நிறுவனர் தாளாளர் சிவசுப்பிரமணியம், உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துனை ஆணையர் பெருப்பில் உள்ள தக்கார் லட்சுமணன் , கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜ் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், குமார், சரவணன், மற்றும் கோவில் நிர்வாக குழுவினர், பணியாளர்கள், ஏற்பாடு செய்திருந்தனர்.