குழந்தைகளை கண்டுபிடிக்க சிறப்பு ஏற்பாடு
பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் குழந்தைகள் காணாமல் போனால் கண்டுபிடிப்பதற்கு காவல் கண்காணிப்பாளர் QR CODE பொருத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டினார்.
By : King 24x7 Angel
Update: 2024-01-25 06:56 GMT
பத்து லட்சத்துக்கு அதிகமான பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். எங்கு பார்த்தாலும் அரோகரா கோஷம் உன்னை முழங்க பக்தர்கள் பரவசத்துடன் ஆட்டம் பாட்டம் காவடி உடன் வலம் வருகின்றனர். பக்தர்கள் அதிகளவு குவிந்துள்ளதால் ஏராளமான கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகள் முதியவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறுவார்கள். குழந்தைகள் காணாமல் போனால் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான காரியமாகி விடுகிறது. இந்நிலையில் குழந்தைகள் கண்டுபிடிப்பதற்கு பழநியில் குழந்தை பக்தர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் QR CODE பொருத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டினார். குழந்தைகள் காணாமல் போனால் விரைவாக கண்டுபிடிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.