கபிலர் நினைவுத்தூணுக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்தல் விழா

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கபிலர் நினைவுத்தூணுக்கு மாலை அணிவித்து, மலர் தூவும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

Update: 2024-04-29 12:10 GMT

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கபிலர் நினைவுத்தூணுக்கு மாலை அணிவித்து, மலர் தூவும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.


 தமிழ்நாடு அரசு பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளான ஏப்ரல் 29 நாளை கவிஞர் தினமாக அறிவித்து அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. தமிழ்க்கவிஞர் நாளில். தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கபிலர் நினைவுத்தூணுக்கு மாலை அணிவித்து, மலர் தூவும் நிகழ்ச்சி திங்கட்கிழமை நடைபெற்றது.

திருக்கோவலூர் கோட்டாட்சியர் ஆர்.கண்ணன் விழாவிற்கு தலைமை வகித்து கபிலர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி சிறப்பு செய்தார். தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் சித்ரா வரவேற்றார். கோவல் தமிழ்ச் சங்கத் தலைவர், சிங்கார உதியன், பண்பாட்டுக் கழகத் துணைத் தலைவர் தே.முருகன், பணி நிறைவு பெற்ற அரசுக் கல்லூரி முதல்வர் மு.ரவிச்சந்திரன். ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Tags:    

Similar News