குருவார திருநாளை முன்னிட்டு சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை
Update: 2023-12-01 04:34 GMT
ஸ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவில்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே மேலவாணியங்குடி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவில் கார்த்திகை மாத குருவார திருநாளை முன்னிட்டு சிறப்பு பகல் அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. இந்நாளில் சாய்பாபாவுக்கு புதுப்பட்டு ஆரஞ்சு நிற வஸ்திரம் அணிவித்து சம்பங்கி மலர் மாலைகள் கொண்டு சிறப்பாக அலங்கரித்தனர். தொடர்ந்து பாபாவுக்கு தீப தூப ஆராதனை காண்பித்து உதிரிப்பூக்களை கொண்டு அர்ச்சனைகள் செய்யப்பட்டன. பின்னர் ஐந்து முகம் கொண்ட தீப ஆராதனைகள் காண்பித்து ஷோடச உபசாரங்கள் நடைபெற்றன. பின்னர் நெய்வேத்தியம் செய்து நிறைவாக கணபதி சுவாமி மற்றும் சாய்பாபாவுக்கு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சாய் பாபாவை வழிபட்டனர்.