பரமத்தி வேலூர்: மழை வேண்டி சிறப்பு தொழுகை.
பரமத்தி வேலூர் தர்கா பள்ளிவாசலில் மழை வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-04 11:37 GMT
மழை வேண்டி சிறப்பு தொழுகை
தமிழக முழுவதும் கடுமையான வெயில் 110 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், தொழிலாளர்கள், விவசாயிகளும், குழந்தைகள் மற்றும் முதியோர் ஆகியோர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இன்று தொடங்கி வரும் 28-ஆம் தேதி வரை கத்திரி வெயில் தொடங்குவதால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் மழை வேண்டி பரமத்திவேலூர் ஜகன்வழி தர்கா பள்ளிவாசலில் முத்தவல்லி சவான் சாகிப் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையில் பரமத்தி, பாண்டமங்கலம், பாலப்பட்டி மோகனூர் மற்றும் கரூர் மாவட்ட உலமாக்கள் மற்றும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.