நெல்லையில் 42 நாட்களுக்குப் பின்பு சிறப்பு பூஜை

நெல்லை குறுக்குத்துறை முருகன் கோயிலில் வெள்ள நீர் வடிந்ததை அடுத்து 42 நாட்களுக்கு பின் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2024-01-31 06:10 GMT

சிறப்பு பூஜை

நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17,18 ஆம் தேதி கனமழை பெய்ததால் தாமிரபரணியில் 1லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்றது.இதனால் தாமிரபரணியில் உள்ள குறுக்குத்துறை முருகன் கோயிலில் வெள்ளம் சூழ்ந்தது. அப்போது‌ அர்ச்சகர்கள் முருகனின் உற்சவரை மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்தனர். இந்த நிலையில் தற்பொழுது இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து இன்று 42 நாட்களுக்கு பின்பு சிறப்பு பூஜை நடைபெற்றது.
Tags:    

Similar News