அரசுப்பள்ளிக்கு எதிரே வேகத்தடை அமைப்பு: மக்கள் மகிழ்ச்சி

வையப்பமலை அரசுப்பள்ளிக்கு எதிரே வேகத்தடை அமைக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2023-12-08 09:26 GMT

 வையப்பமலை அரசுப்பள்ளிக்கு எதிரே வேகத்தடை அமைக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வையப்பமலை அரசினர் மேல்நிலைப்பள்ளி எதிரில் வேகத்தடை அமைக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி.

மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலை அரசினர் மேல்நிலைப்பள்ளி எதிரே, திருச்செங்கோடு– ராசிபுரம் நெடுஞ்சாலை சென்றுகொண்டுள்ளது. இச்சாலையில் தினமும் கணக்கில் அடங்காத அளவிற்கு எண்ணற்ற பேருந்துகள், இருசக்கர, இலகுரக, கனரக வாகனங்கள் என எந்நேரமும் சென்று வருகின்றது. இவ்வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதால் மாணவர்கள், ஆசிரியர்கள் சாலையை கடக்க சிரமப்பட்டு வந்தனர்.

ஒருசில நாட்களில் எதிர்பாராத விதமாக சிறுசிறு விபத்துகளும் நடந்து வந்தது. எனவே, இப்பள்ளி எதிரே வேகத்தடை அமைக்க வேண்டும் என மக்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, வேகத்தடை அமைத்தனர். இப்பணியினை நேற்று, கோட்டபொறியாளர் ஸ்ரீகுணா, உதவிகோட்டப்பொறியாளர் தமிழரசி, உதவிப்பொறியாளர்கள் மோகன்ராஜ், சையது, சாலைஆய்வாளர் அங்கப்பன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

சாலைப்பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ஜாகிர் மற்றும் சாலைப்பணியாளர்கள் உடனிருந்தனர். மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியதால், மக்கள் மகிழ்சிடைந்து அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்தனர்.

Tags:    

Similar News