திருவிழா நடைபெறுவதற்கான உபயதாரர்கள் ஆலோசனைக் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் உள்ள ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோவிலின் சித்திரை பெருவிழா நடத்துவதற்கான உபயதாரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் உலக பிரசித்தி பெற்ற கோவில் தலமாக விளங்கும் ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோவிலின் சித்திரை பெருவிழா வருகிற ஏப்ரல் மாதம் 14 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது .இந்த நிலையில் திருவிழா நடைபெறுவதற்கான உபயதாரர்கள் ஆலோசனைக் கூட்டம் கோவில் செயல் அலுவலர் பிரியா தலைமையில், கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ். ஆறுமுகம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் கலந்து கொண்டனர். 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில்,ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் உபயதாரர்களாக திருவிழாவை எடுத்து நடத்துவது வழக்கம் இந்நிலையில் 11 நாட்கள் நடைபெறும் விழாவில் அனைத்து நாட்களும் விழாவை நடத்தும் உபயதாரர்கள் கலந்து கொண்டு அவர்களது தரப்பில் உள்ள கோரிக்கைகளை தெரிவித்தனர்.
இதில் முக்கியமாக இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளாக கழிப்பிடம், மருத்துவம் குடிநீர், உள்ளிட்ட வசதிளை பேரூராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் பேரூராட்சி தலைவர் யுவராஜிடம் கோரிக்கை வைத்தனர் நிச்சயம் கோரிக்கையை நிறைவேற்றுவதாக பேரூராட்சித் தலைவர் யுவராஜ் தெரிவித்தார்.