மவுண்ட் ஹில்டன் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா

பழைய குற்றாலம் மவுண்ட் ஹில்டன் பப்ளிக் பள்ளியில் நடந்த 4ம் ஆண்டு விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.;

Update: 2024-02-07 08:31 GMT
 விளையாட்டு விழா
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் மவுண்ட் ஹில்டன் பப்ளிக் பள்ளியில் 4 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தாளாளா் ஆா்ஜேவி. பெல் தலைமை வகித்தாா். செயலா் கிரேஸ் கஸ்தூரி பெல் முன்னிலை வகித்தாா். பள்ளி இயக்குநா் ஃ ப்ராம்டன் ரத்னா பெல் வரவேற்றாா். தென்காசி அரசு தலைமை மருத்துவா் ராஜேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினாா். டாக்டா் அருணா ராஜேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Tags:    

Similar News