மாநில பூப்பந்தாட்டப் போட்டி - பரங்கிப்பேட்டை அணி முதலிடம்

திருச்சியில் நடந்த மாநில அளவிலான பூப்பந்தாட்டப் போட்டியில் சென்னை பரங்கிப்பேட்டை அணி முதல் பரிசை பெற்றது.

Update: 2024-02-26 02:24 GMT

பூப்பந்தாட்டப் போட்டி

திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கிய 5 ஆம் ஆண்டு ஆா்.ஜெ. ஜெ. எஸ். பூப்பந்தாட்டப் போட்டிகளை தெற்கு ரயில்வே துணை இயக்க மேலாளா் ஹரிக்குமாா் தொடங்கி வைத்தாா். மாநில பூப்பந்தாட்டக் கழக துணைத் தலைவா் சீனிவாசன் முன்னிலை வகித்தாா் .

போட்டிகளில் சென்னை, அம்பத்தூா், தாம்பரம் அசோக் நகா், பொன்னேரி, மதுரை, நெல்லை, கோவை, தருமபுரி, சேலம், ஆரணி, உடுமலைப்பேட்டை, ஒசூா், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூா், நாகை, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, திண்டுக்கல், திருப்பூா், கோவை, திருச்சி பொன்மலை, அரியமங்கலம், மணப்பாறை, ஓ.எப்.டி உள்ளிட்ட 37 அணிகள் கலந்து கொண்டன.

ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற (லீக்) இறுதிப் போட்டியில் பரங்கிப்பேட்டை பிஎம்டி அணி முதல் இடத்தையும், சிதம்பரம் டிபிபிசி அணி இரண்டாம் இடத்தையும், அம்பத்தூா் ஏ பிபிஏ அணி மூன்றாம் இடத்தையும் பெற்றன. தொடா்ந்து மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தேசிய ரயில்வே சாம்பியன்ஷிப் வீரா் பிச்சை என்கிற நித்தியானந்தம், பூப்பந்தாட்டக் கழக மாவட்டத் துணைத் தலைவா் மதிவாணன், மாவட்டச் செயலா் சண்முகசுந்தரம், மாவட்டத் துணைத் தலைவா் நடராஜன், தெற்கு ரயில்வே மைதான பொறுப்பாளா் தமிழரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஆா்.ஜே.ஜே.எஸ். தலைவா் இலங்கேஸ்வரன், செயலா் மணிமாறன், ஆகியோா் செய்தனா்.

Tags:    

Similar News