தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பணம் திருடியவர் கைது
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பணம் திருடியவர் கைது. போலீசார் நடவடிக்கை.
Update: 2024-04-09 04:42 GMT
சேலம் சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 37). தனியார் நிறுவன ஊழியர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 2 செல்போன், ரூ.2,500 மற்றும் பொருட்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வீடு புகுந்து பொருட்களை திருடியதாக எஸ்.எம்.சி. காலனியை சேர்ந்த வெங்கடேசன் (35) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டன.