STOP DRUG ABUSE – கோவையில் மாணவிகளின் உலகச் சாதனை முயற்சி !

“STOP DRUG ABUSE” – 500 பெண்களின் ரேம்ப் வாக் சாதனை.;

Update: 2025-09-03 07:34 GMT
கோவை பார்க் இன்ஸ்டிடியூஷன்ஸ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி வளாகத்தில், போதைப்பொருள் தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் “STOP DRUG ABUSE” என்ற தலைப்பில் உலகச் சாதனை முயற்சி நடைபெற்றது. ஃபேஷன் ஆர்ட் இன்ஸ்டிடியூட் ஃபார் கிரியேட்டிவ் ஸ்கில்ஸ் மற்றும் பார்க் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ் இணைந்து நடத்திய இந்த நிகழ்வில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் ‘போதையில்லா தமிழ்நாடு’ உறுதிமொழி எடுத்து வண்ண உடைகளில் ரேம்ப் வாக் நடத்தினர். டாக்டர் அனுஷா ரவி, டாக்டர் காயத்ரி நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியின் நிறைவில் World Records Union சார்பில் இந்த சாதனை அங்கீகரிக்கப்பட்டு பங்கேற்ற மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

Similar News