மாணவர்கள் முழு நம்பிக்கை வைத்தால் ஜெயிக்க முடியும்: மாவட்ட ஆட்சியர்

மயிலாடுதுறை தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில்  மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.;

Update: 2024-02-04 08:59 GMT

பரிசு வழங்கிய ஆட்சியர்

 மயிலாடுதுறையில் தனியார் (சில்வர் ஜூப்ளி மெட்ரிகுலேஷன்) பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

மாவட்ட ஆட்சியர் பேசுகையில் மாணவப் பருவம் என்பது நல்ல பருவம் ஒவ்வொரு மாணவரும் தங்களின் மீது நம்பிக்கை வைத்தால் சாதிக்க முடியும், மிகச் சிறப்பாக படிக்க முடியும் உங்களால் எந்த உயரத்திற்கும் செல்ல முடியும் என்றார். வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் இழக்கலாம் நம்பிக்கையை மட்டும் இழக்கக்கூடாது என்றும் நம்பிக்கையை இழந்தால் வாழ்க்கையை இழக்க நேரிடும் என்றார். 

Advertisement

உங்களுக்கு பிடிக்கக்கூடிய விஷயத்தில் நீங்கள் சாதிக்க வேண்டும் பிடிக்காத விஷயத்தில் சாதிக்க இயலாது. ஏ ஆர் ரகுமான் பத்தாம் வகுப்பிற்கு மேல் பள்ளிக்கு செல்லவில்லை இருப்பினும் அவருக்கு பிடித்த விஷயத்தை செய்து அவர் இன்று சாதனை மனிதராக விளங்குகிறார். கிரிக்கெட் வீரர் டென்டுல்கர் படிப்பை விட விளையாட்டில் அதிக ஆர்வம் செலுத்தினார் அதனால்தான் விளையாட்டில் அவர் ஒரு ஜாம்பவனாக விளங்கினார். எனவே நமக்கு பிடித்த விஷயத்தை செய்து சாதனை படைக்க வேண்டும், இந்த உலகத்தில் சாதனை படைப்பதற்கு பல்வேறு விஷயங்கள் உள்ளது.

நான் முதல்வன் திட்டத்தில் பல்வேறு துறையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், டெக்னாலஜி கல் இன்வென்ஷன் அதிகமாக வந்துள்ளது மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டரில் உலகம் முழுவதையும் அறிந்து கொள்ளும் அளவிற்கு வசதியுள்ளது படிப்பதற்கு நிறைய உள்ளது டைவர்ஷன் ஆவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளது.

எனவே இந்த வயசுல எப்படி டெடிகேட்டடா இருக்கிறோம் சாதிக்க நினைக்கிறோம் என்பதை நினைத்து உழைத்தால் நிச்சயம் சாதிக்க முடியும் என்றார்.

Tags:    

Similar News