கன்னிவாடி கல்லூரியில் அடிப்படை வசதிகள் இன்றி மாணவர்கள் அவதி
கன்னிவாடி கல்லூரியில் அடிப்படை வசதிகள் இன்றி மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-08 13:58 GMT
கன்னிவாடி கல்லூரி மாணவர்கள்
கன்னிவாடி அரசு கலை கல்லுாரிக்கு போதிய கட்டட, குடிநீர் வசதி இன்றி மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.இங்கு 2022ல் ஏற்படுத்தப்பட்ட இந்த கல்லுாரிக்கென கட்டட வசதியின்றி கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்படுகிறது.
இரண்டாம் ஆண்டு முடிந்து 3ம் ஆண்டுக்காக வரும் மாணவர்களுக்கான கூடுதல் வகுப்பறை வசதி இல்லை. போதிய குடிநீர் ,வேதியியல், கணினி துறை ஆய்வகங்கள் இல்லை. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் போதிய கட்டமைப்பு வசதி இல்லாததால் மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.