சுசீந்திரம் கோவிலில் மஞ்சள் வழங்கும் நிகழ்ச்சி

பெருந்திருவிழாவானது வருகிற 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.;

Update: 2023-12-16 07:55 GMT
சுசீந்திரம் கோவிலில் மஞ்சள் வழங்கல் .
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி மாத பெருந்திருவிழாவானது வருகிற 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.அதன் ஒரு நிகழ்ச்சியான மஞ்சள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதில் தாணுமாலிய சுவாமி கோவில் 18 பிடாகைகள், சுற்றுவட்டார ஊர் பெரியவர்களை அழைத்து மஞ்சள், வெற்றிலை, பாக்கு மற்றும் பத்து நாள் விழா குறிப்பேடுகள் வைத்து வழங்கப்படுவது வழக்கம். அது போன்று இந்த வருடமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மட்டப்பள்ளி மடம் பிரசாத், தெற்கு மண் பிரதீப் நம்பூதிரி மற்றும் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் உறுப்பினர்கள் ராஜேஷ், ஜோதிஷ்குமார், சுந்தரி துளசிதரன் நாயர், கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகநாதன் மற்றும் பக்தர்கள் அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News