மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மஞ்சப்பை இயந்திரம் வழங்கல்
அக்னி ஸ்டீல் நிறுவனம் சார்பில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மஞ்சப்பை இயந்திரம் வழங்கப்பட்டது.
உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் ஈரோட்டில் அக்னி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்களான ஆர்.கிருஷ்ணமூர்த்தி, எம்.சின்னச்சாமி, கே.தங்கவேலு ஆகியோர் தலைமை தாங்கினர்.
செயல் இயக்குனர் எஸ்.கே.ராம் ஜி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஈரோடு, பெருந்துறை சிப்காட் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வி.சுவாமிநாதன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் ஏ.ஜோதிபிரகாஷ் ஆகியோர் பங்கேற்று, அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்தும், அதனை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமாக பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனம் சார்பில் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி 200 மரக்கன்றுகள் நடப்பட்டது. முன்னதாக பிளாஸ்டிக் பயன்பாட்டினை தடுக்கும் வகையில் தானியங்கி முறையில் இயங்கும் 'மஞ்சப்பை' இயந்திரம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அக்னி ஸ்டீல் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.
இந்த இயந்திரத்தில் 10 ரூபாய் நோட்டு அல்லது இரண்டு 5 ரூபாய் நாணயங்களை செலுத்தினால் மஞ்சப்பை கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனத்தினர் தெரிவித்தனர்.