பரமத்தி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஆட்சியர் ச.உமா ஆய்வு

Update: 2023-12-15 15:53 GMT

ஆட்சியர் ச.உமா ஆய்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், குப்பிச்சிபாளையம் உயர்நிலைப் பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.28.00 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், குப்பிச்சிபாளையம் உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்வது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கள ஆய்வு மேற்கொண்டார்.

நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சித்தா பிரிவில் மருந்தகம், மருத்துவர் அறை, நீராவிக் குளியல் மருத்துவ அறை, தைல மருத்துவ அறை, அறுவை அரங்குடன் கூடிய 30 படுக்கைகள் பிரிவில் ஸ்கேன் பிரிவு, அறுவை அரங்கம், பிரசவ பின் கவனிப்பு அறை, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, பிரசவ அறை, ஆய்வகம், பல் மருத்துவ பிரிவு உள்ளிட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வருகை தரும் நோயாளிகளின் எண்ணிக்கை, வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

மேலும் 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், கூடுதல் கட்டிட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின் போது மாவட்ட கல்வி அலுவலர் இரவிச்சந்திரன், வட்டாட்சியர் கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.அசோகன், கே‌.நடராஜன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.மேகலா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News