தமிழர் தேசம் மற்றும் வீர முத்தரையர் சங்கம் ஆர்ப்பாட்டம்
Update: 2023-12-21 06:25 GMT
ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பத்தாவது வார்டு கொட்டகைக்கார தெருவில் தார் சாலை அமைத்து தரக்கோரி அடிப்படை தேவைகள் கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்திருக்கு அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசம் மற்றும் வீர முத்திரையர் முன்னேற்ற சங்கத்தின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். தமிழர் தேச கட்சியின் புதுக்கோட்டை நகரச் செயலாளர் புதுகை காசி, மாநில கொள்கை பரப்பு செயலாளர் தஞ்சை சாமி, மாநில தொழில் நுட்ப பிரிவு செயலாளர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் வீர முத்தரையர் சங்கத்தின் மாநில பொருளாளர் கணேசன், மாவட்ட வழக்கறிஞர் சுந்தர்ராஜன், மாநில துணை செயலாளர் மீசை பாண்டியன் உட்பட பலர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், நகராட்சியை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.