சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறையும், கடமலைக்குண்டு தொண்டு நிறுவனமும் இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தெரு நாடகத்தை நடத்தியது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-04 09:45 GMT
சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு
வத்தலக்குண்டு சுப்பிரமணிய சிவா பஸ் நிலையத்தில் ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் வளம் மற்றும் காலநிலை மாற்றத்துறை உதவியுடன் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறையும், கடமலைக்குண்டு தொண்டு நிறுவனமும் இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தெரு நாடகத்தை நடத்தியது.நாடகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க செய்ய வேண்டியது குறித்தும், செய்யக்கூடாதவை குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பட்டியலிடப்பட்டது. தொடர்ந்து பயணிகளுக்கு துணிப்பை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொண்டு நிறுவன செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.