8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் !

8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாபநாசம் தாலுக்கா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-07-05 05:30 GMT

ஆர்ப்பாட்டம்

8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாபநாசம் தாலுக்கா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் தமிழ் வளவன் தலைமை வைத்தார் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும் 21 மாத கால நிலுவைத் தொகை முடக்கப்பட்ட அகவிலைப்படி பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும்.  8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தின் பாபநாசம் வட்ட தலைவர் வரதராஜன் வட்ட பொருளாளர் செல்வராணி துணை வட்டாட்சியர்கள் அன்புக்கரசி தமயந்தி மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News