தாமிரபரணி ஆற்று வழிப்பாதை சீரமபை்பு பணிகள் : ஆட்சியர் ஆய்வு
மருதூர் அணைக்கட்டு முதல் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் புன்னக்காயல் வரை மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகளையும், நடைபெற்றுவரும் சீரமைப்புப் பணிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.;
ஆட்சியர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த அதிகனமழை மற்றும் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் நீர் வழிப்பாதையினை கலியாவூர் கிராமத்தில் அமைந்துள்ள மருதூர் அணைக்கட்டு முதல் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் புன்னக்காயல் வரை உள்ள கண்மாய்கள், குளங்கள், கால்வாய்கள், ஆற்றுப்பாலங்கள், மேம்பாலங்கள் மற்றும் தடுப்பணைகளில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சீரமைக்கப்பட்டுள்ள பணிகளையும், நடைபெற்றுவரும் ஒரு சில சீரமைப்புப் பணிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி, மருதூர் கீழக்கால்வாய், மேலக்கால்வாய், கலியாவூர் - உலக்குடி கண்மாய், வல்லநாடு தாமிரபரணி மேம்பாலம், வசவப்பபுரத்தில் மேலக்கால்வாய், கருங்குளம் தாமிரபரணி மேம்பாலம், வேளூர் குளம், ஏரல் ஆற்றுப் பாலம், உமரிக்காட்டில் ஆற்றின்கரை மற்றும் புன்னக்காயல் தடுப்பணை ஆகியவற்றில் ஏற்பட்ட உடைப்புகளை சீரமைக்கப்பட்டுள்ள அனைத்துப் பணிகளையும், நடைபெற்றுவரும் ஒரு சில சீரமைப்புப் பணிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார்.
மேலும், நடைபெற்றுவரும் ஒரு சில சீரமைப்புப் பணிகளையும் விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, அறிவுறுத்தினார்கள். இந்த ஆய்வின் போது, தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருச்சந்திரன், செயற்பொறியாளர்கள் மாரியப்பன் (தாமிரபரணி வடிநிலக்கோட்டம்), வசந்தி (கோரம்பள்ளம் வடிநிலக்கோட்டம்), தூத்துக்குடி, ஏரல் மற்றும் திருச்செந்தூர் வட்டாட்சியர்கள், கருங்குளம், திருவைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.