ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி!

திருப்பூர் அரிசிக்கடை வீதியில் உள்ள ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

Update: 2024-06-27 11:42 GMT

திருப்பூர் அரிசிக்கடை வீதியில் உள்ள ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.


திருப்பூர் அரிசி கடை வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும்  பணி நேற்று நடைபெற்றது. 3 மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் இந்த பணி கோவில் வைகாசி விசாக தேர் திருவிழா நடைபெற்றதால் 6 மாதம் கழித்து நேற்றைய தினம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஹர்ஷினி , கோவில் செயல் அலுவலர் சரவணபவன் முன்னிலையில் உண்டியல் காணிக்கை என்னும் பணி நடைபெற்றது. அறங்காவலர் குழு உறுப்பினர்கள் , ஸ்ரீவாரி டிரஸ்ட்டை சேர்ந்த உறுப்பினர்கள் ,  பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உண்டியல் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டனர். இதில் பணமாக 13 லட்சத்து 61 ஆயிரத்து 190 ரூபாய் ரொக்கம் , தங்கம் 23 கிராம் மற்றும் வெள்ளி 153 கிராம் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது.
Tags:    

Similar News