டெய்லர் தூக்குப்போட்டு தற்கொலை!
வேலூரில் டெய்லர் வேலை செய்து வரும் நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-06-03 10:46 GMT
தற்கொலை
வேலூர் சைதாப்பேட்டை பங்களா தெருவை சேர்ந்தவர் முகமதுசலீம் டெய்லர்(வயது 49). இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன் -மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த முகமது சலீம் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.