5 ஆண்டாக மாற்றுப் பணியில் ஆசிரியை: கல்வி பாதிப்பதாக பெற்றோர்கள் அதிருப்தி!

5 ஆண்டாக மாற்றுப் பணியில் ஆசிரியை: சென்றதால் கல்வி பாதிப்பதாக பெற்றோர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-13 15:56 GMT

பள்ளிக்கூடம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருமயம் அரிமளம் ஒன்றியம் நல்லம்பாள் சமுத்திரம் ஊராட்சி சேர்ந்த மாவடிபட்டி கிராமத்தில் 350 பேர் வாசித்து வருகின்றனர். இங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்து மாணவிகள் மட்டும் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியை ஒருவர் பணியாற்றி வந்தனர் உதவி ஆசிரியை ஆடலின் ரெஜினா பாய் கடந்த 2019 ஆம் ஆண்டு பள்ளி கல்வித்துறை தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவுபடி திருநெல்வேலி மாவட்டத்திற்கு மாற்று பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இவரது கணவர் மாற்றுத்திறனாளி என்பதால் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முன்னுரிமை அடிப்படையில் அதிகாரிகள் மாற்றுப் பணி வழங்கி உள்ளனர்.

இதனால் அனைத்து பாடங்களையும் தலைமை ஆசிரியர் வீரபாபு கற்பித்து வருகிறார். தலைமை ஆசிரியர் பணி நிமித்தமாகவோ அல்லது விடுமுறையில் சென்றாலோ வேறு பள்ளிகளில் இருந்து ஆசிரியரை பணிக்கு வரவழைக்கும் நிலை உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக உதவி ஆசிரியை மாற்றுப் பணிக்கு சென்று விட்டதால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மாணவர்கள் சேர்க்கையும் வெகுவாக குறைந்து வருகிறது வேறு ஒரு உதவி ஆசிரியரை நியமித்து பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News