குவாரியில் மூழ்கி வாலிபர் பலி - 2 நாட்களுக்குப் பின்னர் உடல் மீட்பு
Update: 2023-11-29 07:37 GMT
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள உப்பிலிகுடி ஏடிகே நகர் பகுதியில் தனியார் கல்குவாரி உள்ளது. இங்கு தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் மழை நீர் நிரம்பியுள்ள நிலையில் கடந்த 26 ஆம் தேதி மதியம் அதே பகுதியை சேர்ந்த செல்வம் வயது (30) உட்பட நாலு பேரு மீன்பிடிக்க சென்றனர். மீன் எதுவும் சிக்காததால் மூன்று பேர் புறப்பட்டு சென்றனர். செல்வம் மட்டும் பாறை மீது நின்றபடி தூண்டில் போட்டுக் கொண்டிருந்தபோது கால் வலிக்கியதில் தண்ணீர் விழுந்தார். நீண்ட நேரமாகியும் செல்வம் வீடு திரும்பாததால் 3 பேரும் கல்குவாரிக்கு வந்து பார்த்தபோது அவரை காணவில்லை இதை எடுத்து கீரனூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். குவாரி பள்ளம் மிகவும் ஆழமாக இருந்ததால் தண்ணீருக்குள் பயன்படுத்தப்படும் கேமராவின் உதவியுடன் செல்வத்தின் உடலை தீயணைப்பு மீட்பு படையினர் தேடி வந்தனர். இந்நிலையில் 100 அடி ஆழத்தில் பாறையில் சிக்கியிருந்த செல்வம் உடலை நீச்சல் பயிற்சி பெற்ற இரண்டு தீயணைப்பு வீரர்கள் நேற்று அதிகாலை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இரண்டு நாள் போராட்டத்திற்கு பின்னர் வாலிபர் உடல் மீட்கப்பட்ட சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.