ஆத்தூர் : வாலிபர் விஷம் அருந்தி தற்கொலை
ஆத்தூர் அருகே இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வடுகின்றனர்.;
Update: 2024-03-06 02:05 GMT
இளைஞர் தற்கொலை
ஆத்தூர் அருகே கைலாசநாதர் திருப்புகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் விசு என்கின்ற விசுவநாதன். திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ள நிலையில் இவர் கண்ணாடி மேல் முனியப்பன் கோவில் அருகில் இறந்து கிடந்துள்ளார். அப்பகுதி சென்ற மக்கள் போலீசாருக்கு அளித்த தகவலின் பெயரில் நகரப் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டபோது அவரது உடல் அருகில் மது பாட்டல் பூச்சி மருந்து பாட்டில் இருந்துள்ளது .
இந்நிலையில் முதல் கட்டளை விசாரணையை தற்கொலை செய்து கொண்டார் என தெரிய வந்தது. உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.