தாயார் திட்டியதால் வாலிபர் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், கரடிகுளம் பகுதியில் தாய் திட்டியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-04-01 01:13 GMT
தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகில் உள்ள கரடிகுளம் கிராமம் சிஆர் காலனியைச் சேர்ந்தவர் சிகாமணி மகன் வேணு பிரகாஷ் (19). இவர் வேலைக்கு சென்று விட்டு வாரந்தோறும் சம்பளம் வாங்கி வருவார். ஆனால் அந்த சம்பள பணத்தை வீட்டில் கொடுக்காமல் தனது நண்பர்களுக்கு செலவழித்து விடுவார். இதை அவரது தாயார் கண்டித்து உள்ளார். இதனால் மன வேதனை அடைந்த வேணு பிரகாஷ் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கழுகுமலை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.