சேலம் அருகே ரயில் மோதி வாலிபர் பலி
Update: 2023-12-20 11:42 GMT
ரயில் மோதி வாலிபர் பலி
சேலம் கருப்பூர் வழியாக நேற்று ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோட்டுக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளம் வழியாக நடந்து சென்ற வாலிபர் மீது ரயில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் சிதறி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பான விசாரணையில் அவர் ஓமலூர் அருகே உள்ள சாமிநாயக்கம்பட்டி பகுதியை சேர்ந்த பூவண்ணன் (வயது32) என்பதும், அவர் திருமணமாகாத சோகத்தில் ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரயில் மோதி இறந்ததும் தெரியவந்தது. மேலும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.