குளச்சல் துறைமுகத்தில் கடலுக்குள் பாய்ந்த டெம்போ - பரபரப்பு
Update: 2023-11-30 04:01 GMT
குமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் நேற்று விசைப்படகுகளுக்கு ஐஸ் ஏற்றி வந்த டெம்போ ஒன்று துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. டெம்போவை ஒட்டி வந்த டிரைவர் கியரை போட்டு அங்கு நிறுத்தி இருந்தார். சிறிது நேரத்தில் போட்டு வைத்திருந்த கியர் நழுவி டெம்போ திடீரென நகரத் தொடங்கியது. இதனை பார்த்ததும் அங்கு நின்றவர்கள் சத்தமிட்டனர். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் டெம்போ உருண்டு கடலை நோக்கி சென்றது. மெதுவாக சென்றதால் டெம்போவின் முன் பகுதி படகு அணையும் தளத்தில் சிக்கி தொங்கிய படி நின்றது. அதிர்ஷ்டவசமாக வாகனம் கடலுக்குள் விழவில்லை. பின்னர் கிரேன் மூலம் டெம்போ மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தால் குளச்சல் மீன்பிடித்துறை முகத்தில் சிறுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.